خَبِّرِي يَا نُسِيْمَةْ عَنْ مُغْرَم
தென்றலே, காதலனைப் பற்றி உரைப்பாய்.
Ta
خَبِّرِي يَا نُسِيْمَةْ عَنْ مُغْرَمْ
شَجِي وَلْهَانْ عَاشِقِ الْأَنْوَارْ
மென்காற்றே! ஓர் ஆர்வமிக்கக் காதலனைப் பற்றிச் செய்தி சொல்
ஒளிகளின் மேல் காதல் கொண்ட, துயருற்ற, மெய்மறந்தவன் இவன்.
أَنْتِ عَنِّي اشْتَكِي لُهْ عَنْ حَالِي
طُولَ اللَّيَالِي سَهْرَانْ كَيْ أَرَى الْمُخْتَارْ
எனக்காக அவரிடம் என் நிலையைப் பற்றி முறையிடு
முக்தாரைக் காண நீண்ட இரவுகள் விழித்திருக்கும் என் ஏக்கத்தைச் சொல்.
مَنْ يَلُمْنِي فِي غَرَامِي طَالَمَا عَاشِقْ جَمَالَكْ
كُنْ شَفِيعِي يَا تِهَامِي جُدْ تَعَطَّفْ بِنَوَالَكْ
உன் பேரழகில் தீராக் காதல் கொண்ட என்னை எவர் நிந்திக்க முடியும்?
திஹாமியே! என் பரிந்துரையாளராகி உமது அருட்கொடைகளை வாரி வழங்குவீர்.
يَا مُحَمَّدْ يَا مُمَجَّدْ يَا مُؤَيَّدْ بِالْشَّفَاعَةْ
هَا أَنَا عِنْدَ بَابِك أَرْتَجِي الْأَنْظَارْ
முஹம்மதே! போற்றப்படுபவரே! பரிந்துரை செய்யும் ஆற்றல் அருளப்பட்டவரே!
இதோ உமது வாசலில் நிற்கிறேன், உமது கடைக்கண் பார்வைக்காக ஏங்குகிறேன்.