مَا مَعِي وَجَهْ قَابِل بِهْ سِوَى حُسُنْ ظَنِّي
உன்னை எதிர்கொள்ள உன்னிடத்திலுள்ள என் நன்நம்பிக்கையைத் தவிர என்னிடம் வேறொன்றுமில்லை.
Ta
مَا مَعِي وَجَهْ قَابِل بِهْ سِوَى حُسُنْ ظَنِّي
فِيكْ يَا رَبِّ فَارْحَمْنِي وَلَا تَمْتَحِنِّي
உன்னிடம் கொண்டுள்ள நன்னம்பிக்கையைத் தவிர உன்னை எதிர்கொள்ள என்னிடம் வேறேதுமில்லை
என் இறைவா, என் மீது கருணை காட்டு, என்னைச் சோதனைக்குள்ளாக்காதே
تُبْتْ يَا رَبِّ فَاقْبَلْ تَوْبَتِي وَاعْفُ عَنِّي
وَامْحُ ذَنْبِي وَسَامِحْ كُلَّ تَقْصِيرْ مِنِّي
என் இறைவா, நான் வருந்தி மீண்டுவிட்டேன், என் மன்னிப்பை ஏற்று எனை மன்னித்தருள்
என் பாவத்தைத் துடைத்து விடு, என்னிடமுள்ள ஒவ்வொரு குறையையும் பொறுத்தருள்
خِفِتْ مِنْ عَاقِبَةْ أَمْرِي فَجُدْ لِي بِأَمْنِي
مَحِضْ فَضْلٍ وَإِحْسَانٍ وَجُودٍ وَمَنِّ
என் முடிவைக் குறித்து நான் அஞ்சுகிறேன், எனக்குப் பாதுகாப்பை வாரி வழங்குவாய்
உனது தூய அருளாலும், கருணையாலும், வள்ளன்மையாலும், உபகாரத்தினாலும்
آه مِنْ عَثْرَتِي يَا رَبِّ مِنْهَا أَقِلْنِي
زَادْ ذَنْبِي وَمِنْ كُثْرِ الْخَطَا حَارْ ذِهْنِي
அந்தோ! என் சறுக்கல்களிலிருந்து என் இறைவா என்னை மீட்டெடுப்பாயாக
பாவங்கள் பெருகிவிட்டன, தவறுகளின் மிகுதியால் என் அறிவு திகைக்கின்றது
أَدْرِكْ أَدْرِكْ بِتَعْجِيلِ الْفَرَجْ وَانْتَقِدْنِي
وَاعْطِنِي عِلِمْ مِنْكَ يَا إِلَهِي لَدُنِّي
உதவி செய், உதவி செய், விரைவான விடுதலையளித்து என்னை மீட்டெடுப்பாயாக
என் இறைவா, உன்னிடமிருந்து எனக்கு ஞானத்தை (லதுன்னி) வழங்கியருள்
يَنْجَلِي بِهْ عَنِ الْقَلْبِ الْصَّدِى كُلَّ رَيْنِ
ياَ سَمِيعَ الْدُّعَاءْ سَلْكَ اسْتَجِبْ وَاسْتَمِعْنِي
அதன் மூலம் இதயத்தின் துருவும் திரைகளும் விலகித் தெளிவு பிறக்கட்டும்
பிரார்த்தனைகளைச் செவியேற்பவனே, என் வேண்டுதலை ஏற்று எனக்குப் பதிலளிப்பாயாக
مَا لِي إِلَّا أَنْتَ مُعْطِي
مَا لِي إِلَّا أَنْتَ مُغْنِي
வழங்குபவனாக உன்னைத் தவிர எனக்கு வேறு யாருமில்லை
சீமானாக்குபவனாக உன்னைத் தவிர எனக்கு வேறு யாருமில்லை