صَفَتِ النَّظْرَهْ
தெளிந்தது பார்வை
Ta
صَفَتِ النَّظْرَهْ طَابَتِ الْحَضْرَةْ
جَاءَتِ الْبُشْرَى لِأَهْل اللهِ
பார்வை தெளிந்தது சபை இனிமையானது
இறைமக்களுக்கு இதோ நற்செய்தி வந்துற்றது
قَامُوْا سُكَارَى لِذِي الْبِشَارَه
جَعْلَوْا عِمَارَهْ شُكْراً لِلّهِ
அச்செய்தியால் பரவசமுற்று எழுந்தனர்
இறைநன்றியால் அவ்விடத்தைத் திக்ரால் நிரப்பினர்
أَيُّهَا الْحَاضِرْ اُذْكُرْ وَذَاكِرْ
إِيَّاكَ تُنْكِرْ حَالَ أَهْلِ اللهِ
வந்திருப்பவரே! நினைவுகூரும் நினைவூட்டும்
இறைநேசர்களின் நிலையை ஒருபோதும் மறுக்காதீர்
فَسَلِّمْ لَهُمْ فِيمَا عَرَاهُمْ
وَاعْلَمْ أَنَّهُمْ غَابُوْا فِي اللهِ
அவர்களை ஆட்கொள்ளும் நிலைக்குப் பணியுங்கள்
அவர்கள் இறைவனில் லயித்திருப்பதை அறிந்திடுங்கள்
فَالْوَجْدُ بِهِمْ دَاعِيْ يَدْعِيْهِمْ
يَطْرَأْ عَلَيْهِمْ فِيْ ذِكْرِ اللهِ
பரவசமே அவர்களை அழைக்கும் அழைப்பாளர்
இறை நினைவில் அது அவர்கள் மீது படர்கிறது
وَمَنْ لَمْ يَجِدْ فَلْيَتَوَاجَدْ
قَصْداً يَتَعَرَّضْ لِفَضْلِ اللهِ
பரவசமுறாதவர் அதை அடைய முயலட்டும்
இறையருளைப் பெற வேண்டி தன்னைத் தயார்படுத்தட்டும்
هَكَذَا قَالُوْا وَلِذَا مَالَوْا
وَلَقَدْ غَالُوْا فِي ذِكْرِ اللهِ
இவ்வாறே அவர்கள் கூறினர் இதற்காகவே அசைந்தனர்
இறை நினைவில் அவர்கள் எல்லை கடந்து சென்றனர்
حَتَّى قَدْ ظَنَّا مَنْ لَيْسَ مِنَّا
أَنَّا جُنِنَّا بِذِكْرِاللهِ
எம்மவர் அல்லாதோர் எண்ணுமளவிற்கு
இறை நினைவால் நாம் பித்தாகிப் போனோம் என்று
هَنِيْئاً لَنَا ثُمَّ بُشْرَانَا
إِنْ كَانَ لَنَا حُمْقٌ فِي اللهِ
எமக்கு நல்வாழ்வு நற்செய்திகள் உண்டாகட்டும்
இறைவனிடத்தில் எமது பித்து நிலை உண்மையானால்