يَا مَرْحَبًا بِالْهَاشِمِيَّةِ
ஓ ஹாஷிமி வம்சத்தினருக்கு நல்வரவு!
Ta
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
أَنْتِ الشَّرِيفَةُ وَالْكَرِيمَةُ
وَالْكَثِيرَةُ لِلصِّيَامِ
தாங்கள் கண்ணியமிக்கவரும் மேன்மையானவரும்
நோன்புகளை அதிகம் நோற்பவருமாவீர்
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
هَلْ فِي الْوَرَى جَدٌّ كَجَدِّكِ
أَحْمَدَ خَيْرِ الْأَنَامِ
அகிலத்தில் உமது பாட்டனாரைப் போன்ற ஒருவர் உண்டோ?
அவரே படைப்புகளின் மேலவரான அஹ்மத் ﷺ
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
هَلْ فِي الْوَرَى أُمٌّ كَأُمِّكِ
نُورُهَا يَجْلُو الظَّلَامَ
அகிலத்தில் உமது தாயாரைப் போன்ற ஒரு தாய் உண்டோ?
அவரது ஒளியானது இருளைப் போக்கவல்லது
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
وَأَبُوكِ حَيْدَرُ مَنْ لَهُ
بَأْسٌ لَدَى حَرْبِ اللِّئَامِ
உமது தந்தை ஹைதர் (அலி), அவர் எத்தகையவர் எனில்
கொடியவர்களுடனான போரில் பேரழிவை விளைவிப்பவர்
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
يَا مَرْحَبًا بِالْحِبِّ زَيْنِ
الْعَابِدِينَ عَلَى الدَّوَامِ
எக்காலமும் வருக! வணக்கவாளிகளின் அலங்காரமான (ஸைனுல் ஆபிதீன்)
மிக அன்பிற்குரியவரே!
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
مَنْ كَانَ يَلْقَى مَا يُرِيدُ
بِدَارِهِ فِي كُلِّ عَامٍ
அவர் ஒவ்வொரு ஆண்டும் தனது இல்லத்தில்
தான் நாடியவற்றை அடைபவராக இருந்தார்
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
وَصَلَاتُهُ أَلْفٌ مِنَ
الرَّكَعَاتِ فِي يَوْمٍ تُقَامُ
ஒவ்வொரு நாளும் அவரது தொழுகையானது
ஆயிரம் ரக்அத்கள் கொண்டதாக நிலைபெற்றிருந்தது
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
نَبَوِيَّةٌ وَسُكَيْنَةٌ
أُخْتَيْهِ مِنْ خَيْرِ الْأَنَامِ
நபவிய்யா மற்றும் ஸுகைனா ஆகிய இருவரும்
மேலான படைப்பினத்தைச் சார்ந்த அவரது சகோதரிகளாவர்
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
وَرُقَيَّةٌ وَنَفِيسَةٌ
أَنْفَاسُهُمْ مِسْكُ الْخِتَامِ
ருக்கைய்யா மற்றும் நபீஸா ஆகியோரது ஒவ்வொரு சுவாசமும்
கஸ்தூரி மணக்கும் முத்திரையாகும்
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
وَكَذَاكَ عَائِشَةُ الَّتِي
مِنْ جَعْفَرٍ ذَاتُ الْمَقَامِ
ஜஃபர் (அஸ்-ஸாதிக்) அவர்களின் புதல்வி ஆயிஷாவும் அப்படியே;
அவர் கண்ணியமிக்க அந்தஸ்துடையவர்
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
مُوسَى وَبَاقِرُ جَعْفَرٌ
أَهْلُ الْمَوَدَّةِ وَالسَّلَامِ
மூஸா, பாக்கிர் மற்றும் ஜஃபர் அவர்களும்
அன்பு மற்றும் சாந்திக்குரியவர்களாவர்
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
آلَ النَّبِي نَوَدُّهُمْ
وَبِوِدِّهِمْ نَلْقَى الْمَرَامَ
நபியின் குடும்பத்தினரை மெய்யாகவே நேசிக்கின்றோம்
அவர்களின் நேசத்தின் வாயிலாகவே எமது விருப்பங்களை அடைகின்றோம்
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
أَنْتُمْ كِرَامٌ وَالْكِرَامُ
لَهُمْ لَدَى اللهِ احْتِرَامُ
நீங்கள் மேன்மையானவர்கள்; மேன்மையானவர்களுக்கு
இறைவனிடம் பெரும் கண்ணியமுண்டு
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
مَنْ جَاءَ يَسْعَى نَحْوَكُمْ
للهِ حَقًّا لَا يُضَامُ
அல்லாஹ்விற்காக உங்களை நோக்கி எவர் நாடுகிறாரோ
அவர் ஒருபோதும் அநீதி இழைக்கப்படமாட்டார்
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
إِجْعَلْ رِضَاكَ عَلَيْهِمُ
يَا رَبِّ فِي دَارِ السَّلَامِ
என் இறைவா! சாந்தி நிறைந்த இல்லத்தில் அவர்கள் மீது
உனது பொருத்தத்தை எக்காலமும் பொழிவாயாக
يَا رَبِّ صَلِّ عَلَى النَّبِي
مُحَمَّدٍ خَيْرِ الْأَنَامِ
இறைவா! படைப்புகளின் மேலவரான முஹம்மது ﷺ நபி மீது
உனது அருளைப் பொழிவாயாக
مَا الْجَعْفَرِيُّ أَحَبَّهُمْ
يَرْجُو بِذَا حُسْنَ الْخِتَامِ
அல்-ஜஃபரி அவர்கள் மீது காதல் கொண்டிருக்கும் வரை
இதன் மூலம் அவர் அழகிய முடிவை எதிர்பார்க்கின்றார்