أَلْفٍ صَلَّى الله عَلَى زَيْنِ الْوُجُودْ
அகிலத்தின் பேரழகு மீது அல்லாஹ்வின் ஆயிரம் ஸலவாத்துகள் (அருளாசிகள்) உண்டாவதாக.
Ta
أَلْفٍ صَلَّى الله عَلَى زَيْنِ الْوُجُودْ
مَنْ سَكَنْ طَيْبَة وَخَيَّمْ في زَرُودْ
படைப்பின் பேரழகு மீது அல்லாஹ்வின் ஆயிரம் ஸலவாத்துக்கள் உண்டாகட்டும்
தைபாவில் வசித்து, ஸரூதில் முகாமிட்டவர் மீது அவை பொழியட்டும்
يَا بُدُورَ الْحَيِّ يَا رَبْعَ الْكِرَامْ
بَلِّغُو ظَبْيَ الْحِمَى مِنِّي السَّلَامْ
குடியிருப்பின் முழு நிலவுகளே, கண்ணியமிக்கவர்களின் உறைவிடமே
புனிதத் தலத்தின் மானிடம் எனது ஸலாத்தைச் சமர்ப்பியுங்கள்
إِنْ تَهَتَكْنَا عَلَيْكُمْ لَا نُلَامْ
غَلَبَ الْوَجْدُ عَلَيْنَا وَ الْغَرَامْ
உங்கள் மீதான காதலால் நாம் நிலைகுலைந்தால் நாம் பழிக்கப்பட மாட்டோம்
ஏக்கமும் காதலும் எம்மை முற்றிலும் வென்றுவிட்டன
لَا يَنَامُ اللَّيْلَ عَاشِقْ مُسْتَهَامْ
إِنَّمَا النَّومُ عَلَى الْعَاشِقْ حَرَامْ
பித்துப்பிடித்த காதலன் இரவில் உறங்குவதில்லை
காதலில் மூழ்கியவனுக்கு உறக்கம் என்பது விலக்கப்பட்டதாகும்
سَادَتِي إِنْ لَمْ تَحِنُّو بِاللِّقَا
مِتُّ وَجْدًا فَلَكُمْ طُولُ الْبَقَاء
என் தலைவர்களே, சந்திப்பின் மூலம் நீங்கள் கருணை காட்டாவிடில்
ஏக்கத்தாலே நான் மடிவேன், நீங்களோ என்றும் நிலைத்திருப்பீர்களாக
أَنَا إِنْ لَمْ أَهْوَا غِزْلَانَ النَّقَاء
أَيُّ فَرْقٍ بَيْنَ قَلْبِي وَ الْجَمَادْ
அல்-நகாவின் மான்களை நான் நேசிக்காவிட்டால்
என் இதயத்திற்கும் உயிரற்ற கல்லுக்கும் இடையில் என்னதான் வேறுபாடு?
آنَسَ اللهُ بِكُمْ أَوْقَاتَنَا
وَسَقَى وَادِيكُمُ فَيْضَ الْغَمَامْ
உங்களைக் கொண்டு அல்லாஹ் எமது பொழுதுகளை ரம்மியமாக்குவானாக
பொழியும் மேகங்கள் உங்கள் பள்ளத்தாக்கிற்கு நீர் புகட்டட்டும்