مِنْ جَمَالِ الْكَوْنِ خَمْرِي
பேரண்டத்தின் அழகிலிருந்து என் மது
Ta
مِنْ جَمَالِ الْكَوْنِ خَمْرِي
ذَقْتُهُ صِرْفاً حَلَالَا
பேரண்டத்தின் அழகிலிருந்து வந்ததென் மது
தூயதாகவும் ஆகுமானதாகவும் அதனைச் சுவைத்தேன்
وَهْوَ مِنْ أَوْصَافِ بَدْرِي
قَدْحَوَى ذَاكَ الْجَمَالَا
அது எனது முழுமதியின் பண்புகளிலிருந்து பெறப்பட்டது
அனைத்துப் பூரணத்துவத்தையும் தழுவிய பேரழகு அது
وَجْهٌ قَدْ لَاحَ سَنَاهْ
وَالْكَوْنُ غَدَا مِرْآهْ
பேரொளி வீசும் அந்தத் திருமுகம் வெளிப்பட்டது
இப்பேரண்டம் அதற்கு ஒரு கண்ணாடியாக மாறியது
إِنْ رُمْتَ فُؤَادِي لِقَاهْ
فَاجْعَلْ هَوَاكَ هَوَاهْ
உனது இதயம் அவனைச் சந்திக்க விழைந்தால்
உனது வேட்கையை அவனது விருப்பத்தோடு ஒன்றாக்கு
أَنَا بِالْرُّوْحِ سَمَاءُ
أَنَا بِالْجِسْمِ هَبَاءُ
ஆன்மாவால் நான் ஒரு பரந்த வானம்
உடலால் நான் வெறும் தூசு
أَنَا زَهْرٌ أَنَا مَاءُ
تِهْتُ مِنْ وَجْدِي دَلَالَا
நானே மலர், நானே நீர்
எனது பரவசத்தின் இனிமையில் நான் லயித்தேன்
وَالْرُّوْحُ رَقَى مَرْقَاهْ
وَالْقَلْبُ غَدَا يَرْعَاهْ
ஆன்மா அதன் உன்னத நிலைக்கு உயர்ந்தது
இதயம் அதனைப் பேணிப் பாதுகாக்கத் தொடங்கியது
وَالْجِسْمُ سَعَى مَسْعَاهْ
لِيَنَالَ بِذَاكَ مُنَاهْ
உடல் தனது பாதையில் விரைந்து சென்றது
அதன் மூலம் தனது பெரும் விருப்பத்தை எய்திட
يَا عَذُوْلاً لَامَ جَهْلاً
مُغْرَماً قَدْ نَالَ وَصْلَا
அறியாமையினால் குறைகூறும் நிந்தனையாளனே
இறைவனுடன் ஐக்கியம் பெற்ற ஒரு காதலனை (நிந்திக்காதே)
إِنْ تَلُمْ صِدْقاً سَتُبْلَى
وَتَذُوْقُ الْحُبَّ حَالاَ
நீ உண்மையாக நிந்தனை செய்தால் நீயும் ஆட்கொள்ளப்படுவாய்
உடனே இந்த அன்பை நீயும் சுவைப்பாய்
بِفَنَائِكَ عَنْ سِوَاهْ
تَأْوِيْ لِفِنَاءِ بَقَاهْ
அவனல்லாத யாவற்றிலிருந்தும் நீ அழிந்து போவதால்
அவனது நிலையான இருப்பின் விஸ்தீரணத்தில் தஞ்சம் புகுவாய்
وَبِبَرْدِ شَرَابِ رِضَاهْ
يُطْفِي الْفُؤَادُ جَوَاهْ
அவனது திருப்தி எனும் பானத்தின் குளிர்ச்சியால்
இதயத்தின் தகிக்கும் வேட்கை தணிகின்றது
صَلَوَاتُ اللهِ تُهْدَى
مِنْ جَمِيْعِ الْطِّيْبِ أَنْدَى
அல்லாஹ்வின் அருளாசிகள் காணிக்கையாகட்டும்
அவை எவ்வித நறுமணத்தையும் விட நறுமணம் மிக்கவை
لِرَسُوْلٍ قَدْ تَبَدَّى
نُوْرُهُ يَمْحُو الْضَّلَالَا
உலகிற்குத் தோன்றிய அந்தத் தூதரின் மீது
எவரது ஒளி வழிகேடுகளை மாய்த்து விடுகின்றதோ
بِسَلامٍ لا يَتَنَاهْ
وَالْاَلِ أُهَيْلِ الْجَاهْ
முடிவில்லாத சாந்தியுடன்
கண்ணியமிக்க அவரது குடும்பத்தினர் மீதும்
وَالْصَّحْبِ وَمَنْ وَالَاهْ
وَجِيْعِ رِجَالِ الله
அவரது தோழர்கள் மற்றும் பின்பற்றுபவர்கள் மீதும்
இறைவனின் அடியார்கள் அனைவர் மீதும்