يَا خَلِقَا الْأَكْوَانْ بِا لْلُّطْفِ عَامِلْنِي
ஓ அண்டங்களைப் படைத்தவனே, உமது தயவால் என்னை நடத்துவீராக.
Ta
Ta
يَا خَلِقَا الْأَكْوَانْ
بِا لْلُّطْفِ عَامِلْنِي
அண்டங்களைப் படைத்தவனே
உன் பேரருளால் என்னை நடத்து
مَا لِيْ عَمَلْ يُرْضِيْكْ
أَنْتَ الْغَنِيْ عَنِّي
உன்னை உவகைப்படுத்தும் நற்செயல் ஏதுமில்லை என்னிடம்
நீயோ என்னைத் தேவையற்றவன்
يَا وَاهِبَ الْإِحْسَانْ
تَقْوَاكَ أَلْهِمْنِي
நன்மைகளை வாரி வழங்குபவனே
உன் இறையச்சத்தை எனக்குள் ஊற்றுவாயாக
قَدْ خَابَ الَّذِيْ يَعْصِيْكْ
سُبْحَانَكَ ارْحَمْنِي
உனக்கு மாறு செய்பவன் திண்ணமாக அழிந்தான்
நீ தூயவன், என் மீது கருணை காட்டு
يَا خَلِقَا الْأَكْوَانْ
بِا لْلُّطْفِ عَامِلْنِي
அண்டங்களைப் படைத்தவனே
உன் பேரருளால் என்னை நடத்து
مَا لِيْ عَمَلْ يُرْضِيْكْ
أَنْتَ الْغَنِيْ عَنِّي
உன்னை உவகைப்படுத்தும் நற்செயல் ஏதுமில்லை என்னிடம்
நீயோ என்னைத் தேவையற்றவன்
بِمَنْ حَوَى الأَنْوَارْ
وَالْفَضْلَ وَالأَسْرَارْ
பேரொளிகளைத் தன்னுள் தாங்கியவர் மூலமாக
சிறப்புகளையும் இரகசியங்களையும் கொண்டவர் மூலமாக
أَحْمَدْ ضِيَا الأَبْصَارْ
مَنْ مَدْحُهُ فَنِِّي
கண்களின் ஒளியான அஹ்மது
அவரைப் புகழ்வதே என் வாழ்வின் கலை
يَا خَلِقَا الْأَكْوَانْ
بِا لْلُّطْفِ عَامِلْنِي
அண்டங்களைப் படைத்தவனே
உன் பேரருளால் என்னை நடத்து
مَا لِيْ عَمَلْ يُرْضِيْكْ
أَنْتَ الْغَنِيْ عَنِّي
உன்னை உவகைப்படுத்தும் நற்செயல் ஏதுமில்லை என்னிடம்
நீயோ என்னைத் தேவையற்றவன்
يَا رَبُّ يَا رَحْمَنُ
صَلِّ يَا ذَا المَنِّ
என் இறைவனே, அளவற்ற அருளாளனே
உபகாரங்களைச் செய்பவனே, ஸலவாத்துகளைப் பொழிவாயாக
عَالْرُّوحِ فِي الأَبْدَانْ
وَالْنُّورِ فِي العَيْنِ
உடல்களுக்குள் உறையும் ஆன்மாவின் மீதும்
கண்களில் ஒளிரும் ஒளியின் மீதும்
يَا خَلِقَا الْأَكْوَانْ
بِا لْلُّطْفِ عَامِلْنِي
அண்டங்களைப் படைத்தவனே
உன் பேரருளால் என்னை நடத்து
مَا لِيْ عَمَلْ يُرْضِيْكْ
أَنْتَ الْغَنِيْ عَنِّي
உன்னை உவகைப்படுத்தும் நற்செயல் ஏதுமில்லை என்னிடம்
நீயோ என்னைத் தேவையற்றவன்
مَا شَعْشَعَتْ أَنْوَارْ
مِنْ رَوْضَةِ الْمُخْتَارْ
தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பூஞ்சோலையிலிருந்து
பேரொளிகள் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வரை
وَغَرَّدَتْ أَطْيَارْ
تَشْدُو عَلَى الغُصْنِ
பறவைகள் கிளைகளின் மீது அமர்ந்து
இன்னிசை பாடிக்கொண்டிருக்கும் வரை