مَنْ مِثْلُ أحمد
அகமது போன்றவர் யார்?
Ta
Ta
اللهْ اللهُ اللهْ اللهُ
اللهْ اللهُ تَبَارَكَ اللهُ
அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ் திருவருள் மிக்கவன் அல்லாஹ்
مَنْ مِثْلُ أَحْمَدَ فِي الكَوْنَيْنِ نَهْوَاهُ
بَدْرٌ جَمِيعُ الوَرَى فِي حُسْنِهِ تَاهُوا
இரு உலகிலும் நாம் நேசிக்கும் அஹ்மதிற்கு நிகர் யார்?
முழுநிலவான அவர் அழகில் படைப்புகள் அனைத்தும் மெய்மறந்தன
مَن مِثْلُهُ وَ إِلَهُ الْعَرْشِ شَرَّفَهُ
بِالْخَلْقِ وَ الْخُلْقِ إِنَّ اللَّهَ أَعْطَاهُ
அரியாசனத்தின் இறைவன் கண்ணியப்படுத்திய அவருக்கு நிகர் யார்?
குணத்திலும் தோற்றத்திலும் மெய்யாகவே அல்லாஹ் அவருக்கு வழங்கினான்
وَالشَّمْسُ تَخْجَلُ مِنْ أَنْوَارِ طَلْعَتِهِ
حَارَتْ عُقُولُ الْوَرَى فِي فَهْمِ مَعْنَاهُ
அவர் தோற்றத்தின் ஒளியால் சூரியனும் நாணமுறுகின்றது
அவர் எதார்த்தத்தை உணர்வதில் மனித அறிவுகள் திகைக்கின்றன
تَبَارَكَ اللَّهُ مَا أَحْلَى شَمَائِلَهُ
حَازَ الْجَمَالَ فَمَا أَبْهَى مُحَيَّاهُ
அல்லாஹ்வின் அருள் மிக்கது, அவர் பண்புகள் எத்துணை இனிமை!
பேரழகைப் பெற்ற அவர் திருமுகம் எத்துணை பிரகாசமானது!
يَا عُرْبَ وَادِي النَّقَى يَا أَهْلَ كَاظِمَةٍ
فِي حَيِّكُمْ قَمَرٌ فِي الْقَلْبِ مَثْوَاهُ
வாதி அந்-நுக்காவின் அரபிகளே, காதிமாவின் மக்களே!
உங்கள் குடியிருப்பில் ஒரு சந்திரன் உண்டு, அதன் இருப்பிடம் இதயமே
صَلَّى عَلَيْهِ إِلَهُ الْعَرْشِ مَا طَلَعَتْ
شَمْسٌ وَ مَا حَدْحَدَ الْحَادِي مَطَايَاهُ
சூரியன் உதிக்கும் வரையிலும், ஒட்டகப் பாகன் வாகனங்களைச் செலுத்தும் வரையிலும்
அரியாசனத்தின் இறைவன் அவர் மீது ஸலவாத் பொழியட்டும்
اللهُ بِالْمَدْحِ لِلْمُخْتارِ مَنَّ عَلَيّْ
عَسَى يُرى لِيَ بَيْنَ المَادِحِيْنَ حَلَي
தேர்ந்தெடுக்கப்பட்டவரைப் புகழும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்குத் தந்தான்
புகழுரைப்போர் வரிசையில் நானும் ஒருவனாய்த் திகழ்வேனாக
إِذَا أَتَيْتُ لِأَقْرَا الصُّحْفَ مِنْ عَمَلِيْ
مَالِي سِوَى مَنْ لَهُ فَضْلٌ يُشِيْرُ إِلَىّ
என் செயல்களின் ஏடுகளை நான் வாசிக்க வரும்போது
எனக்கு அருள்புரியும் அந்த வள்ளலைத் தவிர எனக்கு வேறு யாருமில்லை
مُحَمَّدٌ سَيِّدُ الكَوْنَيْنِ وَالثَّقَلَيْـنِ
وَالفَرِيقَيْنِ مِنْ عُرْبٍ وَمِنْ عَجَمِ
முஹம்மது நபி இரு உலகிற்கும், மனித-ஜின் இனத்திற்கும் தலைவர்
அரபு மற்றும் அரபல்லாத இரு பிரிவினருக்கும் அவரே தலைவர்
هُوَ الحَبِيبُ الذِّي تُرْجَى شَفَاعَتُهُ
لِكُلِّ هَوْلٍ مِنَ الأَهْوَالِ مُقْتَحَمِ
அவரே இறைநேசர், யாருடைய பரிந்துரை எதிர்பார்க்கப்படுகிறதோ
நம்மைத் தாக்கும் ஒவ்வொரு நடுக்கமான அச்சத்திலிருந்தும் காக்க
نَبِيُّنَا الآمِرُ النَّاهِي فَلاَ أَحَدٌ
أَبَرَّ فِي قَوْلِ لاَ مِنْهُ وَلاَ نَعَمِ
நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் நம் நபிக்கு நிகராக
'ஆம்' அல்லது 'இல்லை' என்று சொல்வதில் உண்மை மிக்கவர் எவருமில்லை
كَالزَّهْرِ فِي تَرَفٍ وَالبَدْرِ فِي شَرَفٍ
وَالبَحْرِ فِي كَرَمٍ وَالدَّهْرِ فِي هِمَمِ
மென்மையில் மலரைப் போன்றும், கண்ணியத்தில் நிலவைப் போன்றும்
வள்ளல் தன்மையில் கடலைப் போன்றும், உறுதியில் காலத்தைப் போன்றும் திகழ்பவர்
يِا رَبِّ بِالمُصْطَفَى بَلِّغْ مَقَاصِدَنَا
وَاغْفِرْ لَنَا مَا مَضَى يَا وَاسِعَ الكَرَمِ
இறைவா! முஸ்தபா நபியின் பொருட்டால் எங்கள் நோக்கங்களை நிறைவேற்று
பேரருளாளனே! எங்களின் கடந்த காலப் பிழைகளை மன்னித்தருள்
وَاغْفِرْ إِلَهِي لِكُلِ المُسْلِمِينَ بِمَا
يَتْلُونَ فِي المَسْجِدِ الأَقْصَى وَفِي الحَرَمِ
அக்ஸா பள்ளியிலும் புனித ஹரம் ஷரீஃபிலும் ஓதப்படுவதன் பொருட்டால்
இறைவா! முஸ்லிம்கள் அனைவரின் பாவங்களையும் மன்னித்தருள்வாயாக
بِجَاهِ مَنْ بَيْتُهُ فِي طَيْبَةٍ حَرَمٌ
وَإسْمُهُ قَسَمٌ مِنْ أَعْظَمِ الْقَسَمِ
மதினாவில் புனித இல்லத்தைக் கொண்டிருப்பவரின் அந்தஸ்தின் பொருட்டால்
எவருடைய திருப்பெயர் மகத்தான சத்தியங்களில் ஒன்றோ அவர் பொருட்டால்