لَمْ يَخْلُقِ الرَّحْمَنُ مِثْلَ مُحَمَّدٍ
அளவற்ற அருளாளன் முஹம்மதைப் போன்ற ஒருவரைப் படைத்ததில்லை.
Ta
Ta
لَمْ يَخْلُقِ الرَّحْمَنُ مِثْلَ مُحَمَّدٍ
بَيْنَ الْوَرَى بَشَراً عَلَى الْإِطْلَاقِ
ரஹ்மான் முஹம்மதைப் போல் எவரையும் படைக்கவில்லை
அகிலத்தின் மனிதர்களில் எவருமே அவருக்கு நிகரில்லை
كَلَّا وَلَا عَرَفَ الْخَلَائِقُ قَدْرَهُ
مَا فَوْقَهُ حَقّاً سِوَى الْخَلَّاقِ
படைப்பினங்கள் அவர் அந்தஸ்தை அறியவே இல்லை
படைப்பாளனைத் தவிர அவருக்கு மேல் எவரும் இல்லை
مَاذَا أَقُولُ بِوَصْفِهِ وَمَدِيحِهِ
وَسَنَاهُ دَوْماً بَاهِرُ الْإِشْرَاقِ
அவர் புகழையும் பண்பையும் வர்ணிக்க என்னிடம் என்ன உள்ளது?
அவரது பேரொளி என்றும் பேரெழிலுடன் ஜொலிக்கின்றது
وَهُوَ الَّذِي لِلْخَلْقِ أُرْسِلَ رَحْمَةً
وَأَتَى يُتَمِّمُ مَكَارِمَ الْأَخْلَاقِ
அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே அவர் அனுப்பப்பட்டார்
நற்பண்புகளை முழுமைப்படுத்தவே அவர் வருகை தந்தார்