يَا قُبَّةَ الْخَضْرَا مَالِكْ
O Green Dome, How Captivating You Are
Ta
يَا قُبَّةَ الْخَضْرَا مَالِكْ
فَتَنْتِينَا بِجَمَالِكْ
ஓ பசுமைக் குவிமாடமே! உன்னிடம் என்ன உள்ளது?
உன் எழிலால் எங்களை ஈர்த்துவிட்டாயே!
قَالَتْ جَمَالِي بِمُحَمَّدْ
نَوَّرْ جَمِيعَ الْمَمَالِكْ
அது சொன்னது: "என் அழகு முஹம்மதினால் தான்"
அவர் அனைத்து தேசங்களையும் ஒளிரச் செய்தவர்.
حَوَيْتِ خَيْرَ الْبَرِيَّةْ
سَامِي الْعُلَا وَالْمَزَايَا
படைப்புகளிலேயே சிறந்தவரை உன்னுள் ஏந்திக்கொண்டாய்
உயர்ந்த மாண்பும் சிறப்புகளும் உடையவர் அவர்.
لَهُ تَسِيرُ الْمَطَايَا
مِنْ كُلِّ تِلْكَ الْمَمَالِكْ
அவரை நோக்கியே வாகனங்கள் விரைந்து வருகின்றன
அனைத்து நாடுகளிலிருந்தும்.
يَا قُبَّةَ الْخَضْرَا مَالِكْ
فَتَنْتِينَا بِجَمَالِكْ
ஓ பசுமைக் குவிமாடமே! உன்னிடம் என்ன உள்ளது?
உன் எழிலால் எங்களை ஈர்த்துவிட்டாயே!
قَالَتْ جَمَالِي بِمُحَمَّدْ
نَوَّرْ جَمِيعَ الْمَمَالِكْ
அது சொன்னது: "என் அழகு முஹம்மதினால் தான்"
அவர் அனைத்து தேசங்களையும் ஒளிரச் செய்தவர்.
لَاحَتْ عَلَيْنَا أَنْوَارُهْ
فَاضَتْ عَلَيْنَا أَسْرَارُهْ
அவரின் ஒளிகள் எம்மீது சுடர்விட்டன
அவரின் இரகசியங்கள் எம்மீது வழிந்தோடின.
بُشْرَى لَكُمْ يَا زُوَّارُهْ
بَعْدَ أَدَاءِ الْمَنَاسِكْ
அவரைத் தரிசிப்போரே, உங்களுக்கு நன்மாராயமுண்டு
புனிதக் கடமைகளை நிறைவேற்றிய பிறகு.
يَا قُبَّةَ الْخَضْرَا مَالِكْ
فَتَنْتِينَا بِجَمَالِكْ
ஓ பசுமைக் குவிமாடமே! உன்னிடம் என்ன உள்ளது?
உன் எழிலால் எங்களை ஈர்த்துவிட்டாயே!
قَالَتْ جَمَالِي بِمُحَمَّدْ
نَوَّرْ جَمِيعَ الْمَمَالِكْ
அது சொன்னது: "என் அழகு முஹம்மதினால் தான்"
அவர் அனைத்து தேசங்களையும் ஒளிரச் செய்தவர்.
يَا سَعْدَ مَنْ شَمَّ تُرَابَهْ
شَوْقاً وَقَبَّلْ أَعْتَابَهْ
அவர் மண்ணின் வாசம் நுகர்ந்தவர் எவ்வளவு பாக்கியசாலி
ஆவலோடு அவர் வாசற்படியை முத்தமிட்டவர்.
تَزُولُ عَنْهُ أَتْعَابُهْ
يَأْمَنْ جَمِيعَ الْمَهَالِكْ
அவரின் கவலைகள் அவரை விட்டு அகன்றுவிடும்
சகல அழிவுகளிலிருந்தும் அவர் பாதுகாப்படைவார்.
يَا قُبَّةَ الْخَضْرَا مَالِكْ
فَتَنْتِينَا بِجَمَالِكْ
ஓ பசுமைக் குவிமாடமே! உன்னிடம் என்ன உள்ளது?
உன் எழிலால் எங்களை ஈர்த்துவிட்டாயே!
قَالَتْ جَمَالِي بِمُحَمَّدْ
نَوَّرْ جَمِيعَ الْمَمَالِكْ
அது சொன்னது: "என் அழகு முஹம்மதினால் தான்"
அவர் அனைத்து தேசங்களையும் ஒளிரச் செய்தவர்.
صَلُّوا عَلَيْهِ يَا حُضَّارْ
وَالْآلِ وَالْصَّحْبِ الْأَخْيَارْ
அவையில் இருப்போரே, அவர் மீது ஸலவாத் சொல்லுங்கள்
அவரின் கிளையார் மற்றும் உன்னதத் தோழர்கள் மீதும்.
تَنْجُو غداً مِنْ عَذَابِ الْنَّارْ
وَتَرْبَحُوا عَفْوَ الْمَالِكْ
நாளை நரக நெருப்பிலிருந்து நீங்கள் தப்புவீர்கள்
அந்தப் பேராசனின் மன்னிப்பையும் பெற்று வெற்றியடைவீர்கள்.