رَقَّتْ عَيْنَايَ شَوْقًا
My Eyes Wept with Longing
Ta
Ta
السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ الله
السَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبِي
அல்லாஹ்வின் தூதரே, உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்
என் பிரியமானவரே, உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்
يَا نَبِيَّ اللهِ يَا رَسُولَ الله
அல்லாஹ்வின் நபியே, இறைத்தூதரே
رَقَّتْ عَيْنَايَ شَوْقًا
وَلِطَيْبَةَ ذَرَفَتْ عِشْقًا
ஏக்கத்தில் என் கண்கள் கனிந்தன
தைபா நகருக்காக அவை காதலால் கண்ணீர் வடித்தன
فَأَتَيْتُ إِلَى حَبِيبِي
فَاهْدَأْ يَا قَلْبُ وَرِفْقًا
என் அன்பிற்குரியவரிடம் நான் வந்தேன்
இதயமே, அமைதியாகவும் கனிவாகவும் இரு
صَلِّ عَلَى مُحَمَّدْ
முஹம்மது நபி மீது ஸலவாத்துச் சொல்
السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ الله
السَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبِي
அல்லாஹ்வின் தூதரே, உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்
என் பிரியமானவரே, உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்
يَا نَبِيَّ اللهِ يَا رَسُولَ الله
அல்லாஹ்வின் நபியே, இறைத்தூதரே
قَلْبٌ بِالْحَقِّ تَعَلَّقْ
وَبِغَارِ حِرَاءَ تَأَلَّقْ
சத்தியத்தோடு பிணைந்த ஒரு இதயம்
ஹிரா குகையில் அது பேரொளியாய் மிளிர்ந்தது
يَبْكِي يَسْأَلُ خَالِقَهُ
فَأَتَاهُ الْوَحْيُ فَأَشْرَقْ
தன் படைத்தவனிடம் அழுது வேண்டினார்
வஹீ வந்து சேர்ந்ததும் அது பிரகாசித்தது
ٱقْرَأْ ٱقْرَأْ يَا مُحَمَّدْ
ஓதுவீராக! முஹம்மதே, ஓதுவீராக!
السَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ الله
السَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبِي
அல்லாஹ்வின் தூதரே, உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்
என் பிரியமானவரே, உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்
يَا نَبِيَّ اللهِ يَا رَسُولَ الله
அல்லாஹ்வின் நபியே, இறைத்தூதரே
يَا طَيْبَةُ جِئْتُكِ صَبَّا
لِرَسُولِ اللهِ مُحِبَّا
ஓ தைபா! பெரும் காதலால் உன்னிடம் வந்தேன்
அல்லாஹ்வின் தூதர் மீது அன்பு கொண்டவனாக
بِالرَّوْضَةِ سَكَنَتْ رُوحِي
وَجِوَارَ الْهَادِي مُحَمَّدْ
ரவ்ளாவினில் என் ஆன்மா குடியமர்ந்தது
நேர்வழி காட்டிய முஹம்மதின் அருகாமையில்