دَاوِينِي يَا نُورَ الْحَي
உயிருள்ளவனின் ஒளியே, என்னைக் குணப்படுத்து.
Ta
دَاوِينِي يَا نُورَ الْحَي
دَاوِينِي وَانْظُرْ إِلَي
உயிர்களின் ஒளியே! எனக்கு அருமருந்தளிப்பீர்
எனக்கு அருமருந்தளித்து எனை நோக்குவீர்
دَاوِينِي دَاوِي
يَا نُورَ الْحَي
எனக்கு அருமருந்தளிப்பீர், குணமாக்குவீர்
ஓ உயிர்களின் ஒளியே
يَا مُحَمَّدْ أَنْتَ الْمَحْبُوبْ
وَلِأَجْلِكْ نِلْنَا الْمَطْلُوبْ
முஹம்மதே! நீரே எம் நேசத்திற்குரியவர்
உம் பொருட்டால் நாம் நாடியதை அடைந்தோம்
بِمَدْحِكْ تَشْتَاقُ الْقُلُوبْ
تُنْجِينَا بِيَوْمِ الْدِّينْ
உம் புகழினால் இதயங்கள் ஏக்கமுறுகின்றன
தீர்ப்பு நாளில் எம்மைக் காத்தருள்வீர்
دَاوِينِي يَا نُورَ الْحَي
دَاوِينِي وَانْظُرْ إِلَي
உயிர்களின் ஒளியே! எனக்கு அருமருந்தளிப்பீர்
எனக்கு அருமருந்தளித்து எனை நோக்குவீர்
دَاوِينِي دَاوِي
يَا نُورَ الْحَي
எனக்கு அருமருந்தளிப்பீர், குணமாக்குவீர்
ஓ உயிர்களின் ஒளியே
اَلْمَادِحْ بِمَدْحُ يَقُولْ
هَوَاهُ مَدْحُ الْرَّسُولْ
புகழ்பவன் தனது புகழாரத்தில் கூறுகிறான்:
தூதரின் புகழே அவனது பேராவல்
لِأَجْلِهْ نِلْنَا الْقَبُولْ
شَفَاعَةْ بِيَوْمِ الْدِّينْ
அவர் மூலமாகவே நாம் அங்கீகாரம் பெற்றோம்
தீர்ப்பு நாளில் அவர்தம் பரிந்துரையையும் பெற்றோம்
دَاوِينِي يَا نُورَ الْحَي
دَاوِينِي وَانْظُرْ إِلَي
உயிர்களின் ஒளியே! எனக்கு அருமருந்தளிப்பீர்
எனக்கு அருமருந்தளித்து எனை நோக்குவீர்
دَاوِينِي دَاوِي
يَا نُورَ الْحَي
எனக்கு அருமருந்தளிப்பீர், குணமாக்குவீர்
ஓ உயிர்களின் ஒளியே
يَا مُحَمَّدْ أَنَا الْمَدَّاحْ
وَبِمَدْحِكْ قَلْبِي يَرْتَاحْ
முஹம்மதே! நான் உம்மைப் புகழ்பவன்
உம்மைத் துதிப்பதில் என் இதயம் அமைதியுறுகிறது
أُهْدِيكَ مَسَا وَصَبَاحْ
صَلَاةً لِيَوْمِ الْدِّينْ
மாலை நேரமும் காலைப் பொழுதும் உமக்குச் சாற்றுகிறேன்
தீர்ப்பு நாள் வரை தொடரும் அருளாசியை
دَاوِينِي يَا نُورَ الْحَي
دَاوِينِي وَانْظُرْ إِلَي
உயிர்களின் ஒளியே! எனக்கு அருமருந்தளிப்பீர்
எனக்கு அருமருந்தளித்து எனை நோக்குவீர்
دَاوِينِي دَاوِي
يَا نُورَ الْحَي
எனக்கு அருமருந்தளிப்பீர், குணமாக்குவீர்
ஓ உயிர்களின் ஒளியே
يَا خَلَايِقْ صَلُّوا عَلَيْهْ
مَوْلَاكُمْ صَلَّى عَلَيْهْ
படைப்புகளே! அவர் மீது ஸலவாத் கூறுங்கள்
உங்கள் அதிபதியும் அவர் மீது அருள் பொழிந்தான்
وَالْجِذْعُ حَنَّ إِلَيْهْ
مِنْ شُوْقُهْ أَنَّ أَنِينْ
ஈச்ச மரத்தின் தண்டு அவருக்காக ஏங்கியது
தன் ஏக்கத்தினால் அது விம்மி அழுதது
دَاوِينِي يَا نُورَ الْحَي
دَاوِينِي وَانْظُرْ إِلَي
உயிர்களின் ஒளியே! எனக்கு அருமருந்தளிப்பீர்
எனக்கு அருமருந்தளித்து எனை நோக்குவீர்
دَاوِينِي دَاوِي
يَا نُورَ الْحَي
எனக்கு அருமருந்தளிப்பீர், குணமாக்குவீர்
ஓ உயிர்களின் ஒளியே
صَلَاةٌ عَلَى الْمُخْتَارْ
وَالْآلِ ثُمَّ الْأَنْصَارْ
தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீது அருளாசி நிலவட்டும்
அவர் குடும்பத்தார் மற்றும் அன்ஸார்கள் மீதும்
وَالصَّحْبِ رَفِيقِ الْغَارْ
أُهْدِيهَا مَعَ النَّسْرِينْ
தோழர்கள் மற்றும் குகைத் தோழர் மீதும்
நறுமணம் கமழ இதனை நான் அர்ப்பணிக்கிறேன்