يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும் வெற்றியையும் நிம்மதியையும் விரைவுபடுத்துவாயாக.
Ta
Ta
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
عَجِّلْ بِالْسَّعْيِ لِنَحْوِهِمِ
تَلْقَ الْرِّضْوَانَ وَتَبْتَهِجِ
அவர்களை நோக்கி விரைந்து முயற்சி செய்வாயாக
நீ இறைப் பொருத்தத்தைப் பெற்று மகிழ்வாய்
هُمْ أَهْلُ الْبَيْتِ أَئِمَّتُنَا
فِي الْخُلْدِ لَهُمْ أَعْلَى الْدَّرَجِ
அவர்கள் அண்ணலாரின் குடும்பத்தினர், எம் தலைவர்கள்
நிலைபேறான மறுமையில் அவர்களுக்கு மிக உயர்ந்த அந்தஸ்துகள் உண்டு
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
سَلِّمْ تَسْلَمْ وَانْظُرْ عَجَبًا
تِلْكَ الْأَنْوَارُ مِنَ الْفَرَجِ
பணிந்து பாதுகாப்படைவாயாக, ஒரு விந்தையைக் காண்பாயாக
அத்தீபங்கள் துன்ப நீக்கத்திலிருந்தே பிரகாசிக்கின்றன
وَاشْرَبْ وَاطْرَبْ وَانْشَقْ عَطِرًا
قَدْ فَاقَ شَذَاهُ عَلَى الْأَرَجِ
அருந்துவாயாக, பரவசமடைவாயாக, நறுமணத்தை நுகர்வாயாக
இதன் வாசம் அனைத்து நறுமணங்களையும் மிஞ்சிவிட்டது
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
قَوْمٌ سَادُوا فِي الْخُلْدِ عَلَى
أَهْلِ الْجَنَّاتِ أُولِي الْسُّرُجِ
நிலைவாழ்வில் ஒளிவிளக்குகளைக் கொண்ட
சுவனவாசிகளுக்குத் தலைவர்களாய் திகழ்ந்த கூட்டத்தினர் அவர்கள்
وَلَهُمْ جَاهٌ وَبِجَدِّهِمُ
يَنْجُو مَنْ زَارَ فَذَاكَ نُجِي
அவர்களுக்கு உயர் கண்ணியம் உண்டு, அவர்களின் பாட்டனார் பொருட்டால்
அவர்களைச் சந்திப்பவர் ஈடேற்றம் பெறுவார், அவரே விடுவிக்கப்பட்டவர்
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
أَبْشِرْ إِنْ جِئْتَ لِدَارِهِمُ
قَدْ فُزْتَ سَرِيعًا بِالْفَرَجِ
அவர்களது இல்லத்திற்கு நீ வந்தால் நற்செய்தி பெறுவாயாக
நீ விரைவாகவே துன்பத்திலிருந்து விடுதலையடைந்து வெற்றி கொண்டாய்
سَادُوا الْأَقْطَابَ لَهُمْ شَرَفٌ
يُضْوِي كَالْشَّمْسِ لَدَى الْمُهَجِ
அவர்கள் ஆத்மீகத் துருவங்களையும் மிஞ்சியவர்கள், அவர்களுக்குப் கண்ணியமுண்டு
அது ஆன்மாக்களுக்குள் கதிரவனைப் போல் பிரகாசிக்கின்றது
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
اِذْهَبْ بِالْلَّيْلِ لِرَوْضَتِهِمْ
أَقْدِمْ أَسْرِعْ بِالْحُبِّ وَجِي
இரவில் அவர்களது பூந்தோட்டத்திற்குச் செல்வாயாக
நேசத்துடன் முன்வருவாயாக, விரைந்து வந்து சேருவாயாக
أَخْلِصْ لِلهِ بِزَوْرَتِهِمْ
أَخْلِصْ فِي الْسَّيْرِ بِلَا عِوَجِ
அவர்களைச் சந்திப்பதில் இறைவனுக்காகத் தூய எண்ணம் கொள்வாயாக
கோணலின்றி அப்பயணத்தில் உள்ளத்தூய்மையுடன் இருப்பாயாக
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
رَاقِبْ لِلْنَّفْسِ وَشَهْوَتِهَا
إِيَّاكَ تُصَاحِبُ لِلْهَمَجِ
உனது ஆன்மாவையும் அதன் இச்சைகளையும் கண்காணிப்பாயாக
பண்பற்றவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்ந்து கொள்வாயாக
اِعْرِفْ قَدْرَ الْأَحْبَابِ وَكُنْ
عِنْدَ الْأَحْبَابِ أُولِي الْدَّرَجِ
நேசத்துக்குரியவர்களின் மதிப்பினை அறிந்துகொள்வாயாக
உயர்பதவிகளைக் கொண்ட அந்த நேசர்களுடனேயே இருப்பாயாக
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
وَاسْمَعْ مِنْهُمْ مَا تَسْمَعُهُ
إِنْ كُنْتَ سَمِيعًا وَابْتَهِجِ
அவர்களிடமிருந்து கேட்பவற்றைச் செவியுறுவாயாக
நீ உண்மையாகவே செவிமடுப்பவனாயின் மகிழ்வடைவாயாக
فَهُنَاكَ لِرُوحِكَ أَسْرَارٌ
تَخْفَى الْأَسْرَارُ عَلَى السَّمِجِ
அங்கு உனது ஆன்மாவிற்கான இரகசியங்கள் உள்ளன
பண்பற்றவர்களுக்கு அந்த இரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளன
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
وَلِأَهْلِ الْحُبِّ مُعَتَّقَةً
كَأْسُ الْأَسْرَارِ بِلَا وَهَجِ
நேசம் கொண்டவர்களுக்குப் பழமையான மதுவுண்டு
எவ்வித எரிச்சலுமில்லாத அந்த இரகசியங்களின் கிண்ணமது
فَاشْرَبْ مَا دُمْتَ مُحِبَّهُمُ
كَأْسًا تَنْهَاكَ عَنِ الْعِوَجِ
நீ அவர்களை நேசிக்கும் வரை அதைப் பருகுவாயாக
அது உன்னை வழிதவறுவதிலிருந்து தடுத்து நிறுத்தும் கிண்ணமாகும்
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
لا تَسْمَعْ قَوْلَ مُكَدِّرِهَا
أَعْدَى الأَعْدَاءِ الْمُعْتَلِجِ
وَاسْمَعْ أَقْوَالَ مُحِبِّهِمِ
كَالْشَّهْدِ بِهِ أَقْوَى الْحُجَجِ
அவர்களை நேசிப்பவரின் சொற்களைச் செவிமடுப்பாயாக
தேனைப் போன்ற அதில் வலிமையான சான்றுகள் உள்ளன
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
وَدَعِ الْإِنْكَارَ لِمُنْكِرِهِ
عَبْدٌ مَحْرُومٌ فِي لُجَجِ
மறுப்பவனை அவன் மறுப்பிலேயே விட்டுவிடுவாயாக
அவன் குழப்பக் கடலில் மூழ்கிய பாக்கியமற்ற அடியான்
لَوْ شَاهَدَ نُورَ أَحِبَّتِنَا
مَا أَنْكَرَ إِنْكَارَ الْلَّجَجِ
எம் நேசர்களின் ஒளியை அவன் கண்டிருந்தால்
இவ்வளவு பிடிவாதமாக அவன் மறுத்திருக்க மாட்டான்
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
مَا قَالَ مَقَالَةَ ذِي جَهْلٍ
مَا قَالَ مَقَالَةَ ذِي عِوَجٍ
அவன் அறிவீனர்களின் பேச்சைப் பேசியிருக்க மாட்டான்
வழிதவறியவர்களின் சொல்லையும் சொல்லியிருக்க மாட்டான்
وَصَلَاةُ اللهِ تَحِيَّتُهُ
لِلْهَادِي الْنَّاسَ إِلَى الْنَّهَجِ
அல்லாஹ்வின் அருளும் அவனது முகமனும் உண்டாவதாக
மக்களை நல்வழிக்கு இட்டுச் செல்பவர் மீது
يَا رَبِّ بِهِمْ وَبِجَدِّهِمِ
عَجِّلْ بِالْنَّصْرِ وَبِالْفَرَجِ
இறைவா! அவர்களின் பொருட்டாலும் அவர்களின் பாட்டனார் பொருட்டாலும்
எம் வெற்றியையும் இன்னல் நீக்கத்தையும் விரைவுபடுத்துவாயாக
وَالْآلِ جَمِيعًا سَادَتِنَا
أَهْلِ الْتَّوْفِيقِ إِلَى الْبَلَجِ
எம் தலைவர்களான அண்ணலார் குடும்பத்தினர் அனைவர் மீதும்
விடியலை நோக்கி இறையருள் பெற்றவர்கள் அவர்கள்
مَا (صَالِحُ) يَتْلُو أَمْدَاحًا
تَضْوِي لَيْلًا مِثْلَ الْسُّرُجِ
'ஸாலிஹ்' புகழாரங்களைப் பாடும் காலமெல்லாம்
அவை ஒளிரும் விளக்குகளைப் போல் இரவில் பிரகாசிக்கின்றன