صَلَاةُ الْبَدْرِيَّة
ஸலவாத்துல் பத்ரிய்யா
Ta
Ta
صَلَاةُ اللّٰه سَلَامُ اللّٰه
عَلَىٰ طٰهٰ رَسُولِ اللّٰه
இறைவனின் அருளும் இறைவனின் சாந்தியும்
இறைத்தூதர் தாஹா அவர்கள் மீது உண்டாவதாக
صَلَاةُ اللّٰه سَلَامُ الله
عَلَىٰ يٰسٓ حَبِيبِ الله
இறைவனின் அருளும் இறைவனின் சாந்தியும்
இறைநேசர் யாசீன் அவர்கள் மீது உண்டாவதாக
تَوَسَّلْنَا بِبِسْمِ الله
وَبِالْهَادِي رَسُولِ الله
அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு வேண்டுகிறோம்
வழிகாட்டும் இறைத்தூதரைக் கொண்டும் வேண்டுகிறோம்
وَكُلِّ مُجَاهِدٍ لِلّٰه
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
இறைவழியில் பாடுபட்ட தியாகிகள் அனைவரைக் கொண்டும்
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
إِلَهِي سَلِّمِ الْأُمَّةْ
مِنَ الْآفَاتِ وَالنِّقْمَةْ
என் இறைவா! இந்த சமுதாயத்தைப் பாதுகாப்பாயாக
சோதனைகள் மற்றும் வேதனைகளிலிருந்து
وَمِنْ هَمٍّ وَمِنْ غُمَّةْ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
கவலைகள் மற்றும் துயரங்களிலிருந்தும்
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
إِلَهِي نَجِّنَا وَاكْشِفْ
جَمِيعَ أَذِيَّةٍ وَاصْرِفْ
என் இறைவா! எங்களைக் காத்து விடுவிப்பாயாக
தீங்குகள் அனைத்தையும் அகற்றித் திருப்புவாயாக
مَكَائِدَ الْعِدَا وَالْطُفْ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
பகைவர்களின் சூழ்ச்சிகளிலிருந்து கருணையுடன் காப்பாயாக
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
إِلَهِي نَفِّسِ الْكُرَبَا
مِنَ الْعَاصِينَ وَالْعَطْبَا
என் இறைவா! இன்னல்களைப் போக்கிடுவாய்
பாவம் செய்தோர் மற்றும் அழிவிலிருந்து
وَكُلِّ بَلِيَّةٍ وَوَبَا
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
ஒவ்வொரு சோதனையிலிருந்தும் கொள்ளை நோயிலிருந்தும்
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
فَكَمْ مِنْ رَحْمَةٍ حَصَلَتْ
وَكَمْ مِنْ ذِلَّةٍ فَصَلَتْ
எத்துணை அருட்கொடைகள் எட்டப்பட்டன
எத்துணை இழிவுகள் தடுத்து நிறுத்தப்பட்டன
وَكَمْ مِنْ نِعْمَةٍ وَصَلَتْ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
எத்துணை அருட்செல்வங்கள் வந்து சேர்ந்தன
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
وَكَمْ أَغْنَيْتَ ذَا الْعُمْرِ
وَكَمْ أَوْلَيْتَ ذَا الْفَقْرِ
முதியவர்களை எத்துணை செல்வந்தர்களாக்கினாய்
ஏழைகளை எத்துணை மேன்மையாக்கினாய்
وَكَمْ عَافَيْتَ ذَا الْوِزْرِ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
பாவிகளுக்கு எத்துணை நிவாரணம் அளித்தாய்
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
لَقَدْ ضَاقَتْ عَلَى الْقَلْبِ
جَمِيعَ الْاَرْضِ مَعَ رَحْبِ
பூமி இவ்வளவு விரிந்திருந்தும்
இதயங்களில் அது நெருக்கடியாகிப் போனதே
فَانْجُ مِنَ الْبَلَا الصَّعْبِ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
எனவே இந்தக் கடினமான துயரிலிருந்து எங்களைக் காப்பாய்
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
أَتَيْنَا طَالِبِي الرِّفْقِ
وَجُلِّ الْخَيْرِ وَالسَّعْدِ
நயமான குணத்தையும் நன்மைகளையும் நாடி வந்தோம்
பெரும் பாக்கியங்களையும் மகிழ்ச்சியையும் தேடி
فَوَسِّعْ مِنْحَةَ الْأَيْدِي
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
எமக்கு வழங்கும் கொடைகளை விசாலமாக்குவாயாக
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
فَلَا تَرْدُدْ مَعَ الْخَيْبَةْ
بَلِ اجْعَلْنَا عَلَى الطَّيْبَةْ
ஏமாற்றத்துடன் எங்களைத் திருப்பி அனுப்பி விடாதே
மாறாக எங்களை நன்மைகளில் ஆக்கிடுவாயாக
أَيَا ذَا الْعِزِّ وَالْهَيْبَةْ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
கண்ணியமும் மகத்துவமும் உடையவனே
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
وَإِنْ تَرْدُدْ فَمَنْ نَأْتِي
بِنَيْلِ جَمِيعِ حَاجَاتِي
நீ எங்களைத் தள்ளினால் யாரிடம் செல்வோம்
எங்களின் அனைத்துத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள
أَيَا جَالِي الْمُلِمَّاتِ
بِأَهْلِ الْبَدْرِ يَا الله
இன்னல்களை நீக்கித் துயரங்களைத் துடைப்பவனே
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
إِلَهِي أَغْفِرْ وَأَكْرِمْنَا
بِنَيْلِ مَطَالِبٍ مِنَّا
என் இறைவா! எங்களை மன்னித்துக் கண்ணியப்படுத்து
எங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதன் மூலம்
وَدَفْعِ مَسَاءَةٍ عَنَّا
بِأَهْلِ الْبَدْرِ يَا اَللّٰه
தீமைகளை எங்களை விட்டும் அப்புறப்படுத்துவாயாக
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
إِلَهِي أَنْتَ ذُو لُطْفٍ
وَ ذُو فَضْلٍ وَ ذُو عَطْفٍ
என் இறைவா! நீயே மென்மையானவன்
அருட்கொடைகளும் கருணையும் கொண்டவன்
وَكَمْ مِنْ كُرْبَةٍ تَنْفِي
بِأَهْلِ الْبَدْرِ يَا اَللّٰه
எத்துணைத் துயரங்களை நீ அகற்றியிருக்கிறாய்
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!
وَصَلِّ عَلَى النَّبِي الْبَرِّ
بِلَا عَدٍّ وَلَا حَصْرٍ
உத்தம நபி அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வாயாக
கணக்கின்றியும் எல்லையின்றியும்
وَآلِ سَادَةٍ غُرٍّ
بِأَهْلِ الْبَدْرِ يَا اَللّٰه
கண்ணியமிக்க அவரின் குடும்பத்தார் மீதும்
பத்ருப் போர் வீரர்களின் பொருட்டால் யா அல்லாஹ்!