اَلْهِجْرَةُ رِحْلَةُ هَادِيْنَا
ஹிஜ்ரத் எமது வழிகாட்டியின் பயணம்
Ta
Ta
اَلْهِجْرَةُ رِحْلَةُ هَادِيْنَا
حَمَلَ الْإِسْلَامَ لَنَا دِيْنَا
ஹிஜ்ரத் என்பது நமது வழிகாட்டியின் பயணம்
நமக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அவர் ஏந்தி வந்தார்
فَسَلَامُ اللّٰهِ عَلَی الْهَادِيْ
وَالْكَوْنُ يُرَدِّدُ آمِيْنَا
இறைவனின் சாந்தி அந்த வழிகாட்டியின் மீது நிலவட்டும்
அகிலமனைத்தும் "ஆமீன்" என எதிரொலிக்கின்றது
رَحَلَ الْصِّدِّيقُ عَنِ الْدَّارِ
فِی صَحْبَةِ خَيْرِ الْأَبْرَارِ
ஸித்தீக் தமது இல்லத்தை விட்டுப் புறப்பட்டார்
நற்பண்பு மிக்கவர்களில் சிறந்தவரின் தோழமையில்
صَلَوَاتُ اللّٓهِ تُبَارِکُهُ
مَلَأَ الْدُّنْيَا بِالْأَنْوَارِ
இறைவனின் அருளாசிகள் அவரை வாழ்த்துகின்றன
உலகத்தை அவர் பேரொளியால் நிரப்பினார்
اَللّٰهُ تَكَفَّلَ يَحْمِيْهِ
وَعَلِيٌّ أَصْبَحَ يَفْدِيْهِ
அல்லாஹ் அவரைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றான்
அலி அவருக்குத் தன்னை அர்ப்பணிக்க முன்வந்தார்
وَبِسِرِّ الْقَوْمِ الْأَشْرَارِ
بِنْتُ الْصِّدِّيْقِ تُوَافِيْهِ
தீயவர்களின் இரகசியச் செய்திகளுடன்
ஸித்தீக்கின் புதல்வி அவரைச் சந்திக்கின்றார்
وَصَلَ الْمُخْتَارُ إِلَی طَيْبَةْ
وَ الْكُفْرُ تَرَاجَع فِی خَيْبَةْ
அண்ணலார் தய்பா நகரைச் சென்றடைந்தார்
நிராகரிப்பு தோல்வியுற்று பின்வாங்கியது
وَ جُنُوْدُ اللّٰهِ تُحِيْطُ بِهِ
مِنْ نُوْرِ الْاِسْلَامِ الْهَيْبَة
இறைவனின் படைகள் அவரைச் சூழ்ந்துள்ளன
இஸ்லாத்தின் ஒளியின் கம்பீரத்துடன்
بِالْرُّوْحِ سَنَحْمِی الْمُخْتَارا
وَ نُقَاتِلْ عَنْهُ الْكُفَّارا
உயிரைக் கொடுத்தும் அண்ணலாரைக் காப்போம்
நிராகரிப்பாளர்களுக்கு எதிராக அவருக்காகப் போரிடுவோம்
عَهْدًا لِلّٰـهِ نُبَايِعُهُ
جُنْدًا لِلّٰـهِ وَ اَنْصَارا
இறைவனிடம் நாம் உடன்படிக்கை செய்கிறோம்
அவனது படையினராகவும் உதவியாளர்களாகவும்