يَا أَجْمَلَ الْأَنْبِيَاء
Oh Most Beautiful of Prophets
Ta
يَا أَجْمَلَ الْأَنْبِيَاء
يَا أَكْمَلَ الْأَصْفِيَاء
ஓ நபிமார்களில் மிக எழிலானவரே!
ஓ தேர்ந்தெடுத்தோரில் மிக முழுமையானவரே!
يَا خَاتَمَ الرُّسْلِ مَا
أَحْلَاكَ فِي قَلْبِي
ஓ தூதர்களின் முத்திரையே! என்
இதயத்தில் நீங்கள் எவ்வளவு இனியவர்!
يَا ذَا الَّذِي نُسْخَةُ
الْأَكْوَانِ فِيْكَ مَطْوِيَّ
ஓ அகிலங்களின் மூலப்பிரதி எவர்
தங்களுக்குள் சுருட்டி வைக்கப்பட்டுள்ளதோ அவரே!
عَطِيَّةٌ أَزَلِيَّة
ஆதியற்ற நித்தியமானதொரு பரிசு
أَنْتَ الَّذِي أُعْطِيتَ
الشَّفَاعَةَ الْوَافِيَّة
முழுமையான பரிந்துரை எனும் கொடை
அருளப்பட்டவர் நீங்களே
وَ الْخَلْقُ حِينَئِذٍ
يَلْتَمِسُونَ الْأَنْبِيَاءْ
படைப்பினங்கள் யாவும் அந்நாளில்
இறைத்தூதர்களைத் தேடி அலையும்போது
ثُمَّ يُقَالُ لِلْأَنَامْ
قَدْ نِلْتُمُ الْأُمْنِيَّة
அப்போது மனிதகுலத்திடம் சொல்லப்படும்:
"உங்கள் பெரும் பேற்றினை அடைந்துவிட்டீர்கள்—
أَلَا اقْصِدُوْا مُحَمَّدًا
بَابَ الْإِلَهِ الْعَالِيَ
முஹம்மதிடம் செல்லுங்கள், அவரே
மேலான இறைவனின் திருவாயில்."
آيَاتُهُ شَافِيَة
அவரின் அத்தாட்சிகள் அருமருந்தானவை
وَهُوَ الْمُعَدُّ لَهَا
وَ ذُوَ الْثَنَاءِ الْوَافِيَ
அவரே அதற்காகத் தயார் செய்யப்பட்டவர்
அவரே நிறைவான புகழுக்குரியவர்.
ثُمَّ يُنَادِي سَاجِدًا
يَا رَبِّ جُدْ رَاضِيَـا
பின்னர் அவர் ஸஜ்தாவிலிருந்து அழைப்பார்:
"என் இறைவா! வாரி வழங்குவாயாக, உவந்துவிடுவாயாக!"
يُنَادِي اشْفَعْ يَا حَبِيْبِ
يَا صَفْوَةَ الْأَصْفِيَاءْ
"பரிந்துரைப்பீராக நேசரே!" என அழைக்கப்படும்
"ஓ தேர்ந்தெடுத்தோரில் தூய்மையானவரே!
وَسَلْ تُعْطَى مَا تَرُوْم
وَلَا تَدَعْ عَاصِيَا
கேளுங்கள், நாடுகின்ற யாவும் தரப்படும்
பாவிகள் எவரையும் விட்டுவிடாதீர்கள்."
يَا صَفْوَةَ الْأَصْفِيَاءْ
ஓ தேர்ந்தெடுத்தோரில் தூய்மையானவரே!
صَلُّوْا عَلَى مَنْ عَلَا
فَوْقَ السَّمَا رَاقِيَا
வானங்களைக் கடந்து விண்ணுயர
ஏறிச் சென்றவர் மீது ஸலவாத் சொல்லுங்கள்
هذَا حَبِيْبٌ غَدًا
عَنَّا العَنَـا مَـاحِيَا
நாளை நம்மிடமிருந்து இடர்களை எல்லாம்
களைந்தெறியும் நேசர் இவரே
يَا رَبَّنَا عَطَّفْ عَلَيْنَا
قَلْبَهُ الزَّاكِيَا
எங்கள் இறைவா! அவரின் தூய இதயத்தின்
கனிவை எங்கள் பக்கம் திருப்புவாயாக
وَاخْتِمْ لَنَا خِتَامَ مِسْكٍ
يَا مُجِيْبَ الدَّاعِيَا
கஸ்தூரி மணத்துடன் எங்கள் முடிவை நிறைவாக்கு
இறைஞ்சுவோர்க்குப் பதிலளிப்பவனே!
بِالْأَسْرَارِ الذَّاتِـيـــة
உந்தன் உள்ளார்ந்த இறை இரகசியங்களைக் கொண்டு