شَهْرُ الرَّبِيع وَافَانَا
The Month of Rabiʿ Is Upon Us
Ta
Ta
شَهْرُ الرَّبِيع وَافَانَا
أَقْبَلْ عَلَيْنَا وَهَنَّانَا
ரபீஉன் மாதம் எம்மை வந்தடைந்தது
எம்மை நெருங்கி அது மகிழ்ச்சியளித்தது
بِهِ أَتَانَا رَسُولُ الله
لِلدِّينِ حَقًّا هَدَانَا
அதனோடு இறைத்தூதர் எம்மிடம் வந்தார்
சத்திய மார்க்கத்தின் பால் எமக்கு வழிகாட்டினார்
شَهْرٌ بِهِ جَاءَ الرَّسُولْ
الْهَاشِمِي بَابُ الْوُصُولْ
அண்ணல் நபி வந்தருளிய மாதம் இதுவே
அண்மையின் வாயிலான ஹாஷிமி குலத்தோன்றல் அவர்
بِقُدُومِهِ نِلْنَا الْقَبُولْ
سُبْحَانَ مَنْ قَدْ أَعْطَانَا
அவரின் வருகையால் நாம் அங்கீகாரம் பெற்றோம்
இதனை எமக்கு அருளியவன் மிகத் தூயவன்
شَهْرٌ بِهِ نِلْنَا الْهُدَىٰ
وَبِهِ انْجَلَى عَنَّا الرَّدَى
நேர்வழியை நாம் ஈட்டிக்கொண்ட மாதம் இதுவே
எம்மை விட்டும் அழிவு அகன்றது இதன் மூலமே
بِجَمَالِهِ لَمَّا بَدَى
مِنْ كُلِّ خَطْبٍ نَجَّانَا
அவரது பேரழகு பிரகாசித்த போது
எவ்விதத் துயரிலிருந்தும் எம்மை அவர் மீட்டார்
يَا رَبِّ صَلِّ يَا سَلَامْ
عَلَى النَّبِي مَاحِي الظَّلَامْ
இறைவா! ஸலாமும் ஸலவாத்தும் பொழிவாயாக
இருளை அகற்றிடும் நபியின் மீது
وَالْآلِ وَالصَّحْبِ الْكِرَامْ
مَا فِيْهِ شَادٍ غَنَّانَا
கண்ணியமிக்க குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும்
அவரைப் புகழ்ந்து பாடுபவர் இருக்கும் காலமெல்லாம்