طَابَ لِي خَلْعُ عِذَارِي
எனது தறிகெட்டத் தனம் எனக்குப் பொருந்துகிறது
Ta
Ta
طَابَ لِي خَلْعُ عِذَارِي
فِي هَوَى الْبَدْرِ الْتَّمَامْ
முழு நிலவின் மீதான என் தீராக் காதலால்
என் கட்டுப்பாடுகளைத் துறப்பதே எனக்கு இனிதாகிறது
بِافْتِقَارِي وَانْكِسَارِي
أَرْتَجِيْ نَيْلَ الْمَرَامْ
என் வறுமையாலும் மன முறிவினாலும்
நான் விரும்புவதை அடைய ஆவலுடன் இருக்கிறேன்
يَا عَذُوْلِي لَا تَلُمْنِي
مَا عَلَى الْعَاشِقُ مَلَامْ
என்னைக் கண்டிப்பவரே, என்னைப் பழிக்காதீர்
ஏனெனில் காதலன் மீது பழி ஏதுமில்லை
اُدْنُ مِنِّي وَارْوِ عَنِّيْ
أَنَا فِي الْعِشْقِ إِمَامْ
என் அருகே வந்து என்னைப் பற்றி மொழிவீர்
ஏனெனில் காதலின் கலையில் நான் ஒரு தலைவன்
خَمْرَةُ الْأَحْبَابِ تُجْلَ
هِيَ حِلٌّ لَا حَرَامْ
அன்பிற்குரியவர்களின் அந்த மது ஊற்றப்படுகிறது
அது அனுமதிக்கப்பட்டதே அன்றி விலக்கப்பட்டதல்ல
مِنْ عُيُونِ الْعِيْنِ تُمْلَى
صَانَهَا الْبَرُّ الْسَّلَامْ
அழகிய கண்களின் ஊற்றிலிருந்து அது நிறைகிறது
அருளாளனும் சாந்தியளிப்பவனுமானவன் அதைப் பாதுகாக்கிறான்
يَا أَخَا الْأَشْوَاقِ يَمِّمْ
سَيِّدَ الْرُّسْلِ الْكِرَامْ
பெருவிருப்பு கொண்ட சகோதரரே, உம் திசையைத் திருப்புவீர்
கண்ணியமிக்க தூதர்களின் தலைவரிடம்!
وَاغْنَمِ الْذِّكْرَ وَزَمْزِمْ
بِصَلَاةٍ مَعْ سَلَامْ
இறைநினைவைப் பற்றிப் பிடித்து மெல்ல இசைப்பீராக
அன்னார் மீது ஸலவாத்தும் ஸலாமும் பொழிந்து
لِحَبِيْبِ الله أَحْمَدْ
كُلَّمَا جَنَّ الْظَّلَامْ
அல்லாஹ்வின் நேசர் அஹ்மதுக்கு அவை உரித்தாகட்டும்
இருள் சூழும் ஒவ்வொரு பொழுதும்
كُلُّ مَنْ وَالَاهُ يَسْعَدْ
وَيَنَالْ حُسْنَ الْخِتَامْ
அவரை நேசிக்கும் எவரும் பேரின்பம் காண்பார்
மேலும் நன்மையான முடிவையும் எய்துவார்