حَيُّوا الْهَادِي بِأَجْمَلَ ذِكْرَى
மிக அழகான நினைவுகளால் வழிகாட்டியை வாழ்த்துங்கள்.
Ta
حَيُّوا الْهَادِي بِأَجْمَلَ ذِكْرَى
صَلُّوا مَعَنَا يَا حُضَّارْ
நேர்வழி காட்டுபவரை மிக அழகிய முறையில் நினைவு கூர்ந்து வாழ்த்துங்கள்
இங்கு கூடியிருப்பவர்களே, எங்களோடு இணைந்து ஸலவாத்துச் சொல்லுங்கள்
فَهُوَ عِمَادِي يَوْمَ الْمَعَادِ
نَبِيُّنَا طٰهَ الْمُخْتَارْ
அவரே மறுமை நாளில் எனது ஆதாரமாவார்
எமது நபி தாஹா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்
صَلُّوا مَعَنَا
எங்களோடு இணைந்து ஸலவாத்துச் சொல்லுங்கள்
هٰذَا الَّذِي سَرَى لَيْلًا
ثُمَّ دَنَا فَتَدَلَّى
ஓரிரவில் விண் பயணம் மேற்கொண்டவர் இவரே
பிறகு அவர் இறைவனை நெருங்கி மிக அண்மையில் வந்தார்
وَهُوَ بِالْأُفُقِ الْأَعْلَى
حَبَاهُ الْوَاحِدُ الْسَّتَّارْ
அவர் மிக உயர்ந்த வானின் எல்லையில் இருந்தபோது
ஏகனும் குறைகளை மறைப்பவனுமான இறைவன் அவருக்கு அருட்கொடைகளை வழங்கினான்
فَهُوَ عِمَادِي يَوْمَ الْمَعَادِ
نَبِيُّنَا طٰهَ الْمُخْتَارْ
அவரே மறுமை நாளில் எனது ஆதாரமாவார்
எமது நபி தாஹா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்
صَلُّوا مَعَنَا
எங்களோடு இணைந்து ஸலவாத்துச் சொல்லுங்கள்
عَلَى الْعَرْشِ رَقَى الْجَمِيلْ
وَكَلَّمَهُ الْمَوْلَى الْجَلِيلْ
அந்த அழகியவர் இறைவனது அர்ஷின் மீது ஏறினார்
மகத்துவமிக்க இறைவன் அவரிடம் உரையாடினான்
وَقَالَ أَبْشِرْ يَا خَلِيلْ
شَفَاعَتُكَ لِمَنْ تَخْتَارْ
அவன் கூறினான்: "மகிழ்ச்சி கொள்க ஓ நேசரே!
நீர் யாரைத் தேர்ந்தெடுக்கிறீரோ அவருக்கே உமது பரிந்துரை"
فَهُوَ عِمَادِي يَوْمَ الْمَعَادِ
نَبِيُّنَا طٰهَ الْمُخْتَارْ
அவரே மறுமை நாளில் எனது ஆதாரமாவார்
எமது நபி தாஹா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்
صَلُّوا مَعَنَا
எங்களோடு இணைந்து ஸலவாத்துச் சொல்லுங்கள்
صَلَّى مَوْلَانَا عَلَيْهْ
وَالْآلِ وَالصَّحْبِ لَدَيْهْ
எங்கள் இறைவன் அவர் மீது ஸலவாத்துச் சொல்வானாக
மேலும் அவரோடிருந்த அவரது குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும்
مَنْ جَاهَدُوا بَيْنَ يَدَيْهْ
وَنَوَّرُوا لَنَا الْأَفْكَارْ
அவர்கள் அவருக்கு முன்னிலையில் அறப்போர் புரிந்தார்கள்
எமது சிந்தனைகளை அவர்கள் ஒளிரச் செய்தார்கள்
فَهُوَ عِمَادِي يَوْمَ الْمَعَادِ
نَبِيُّنَا طٰهَ الْمُخْتَارْ
அவரே மறுமை நாளில் எனது ஆதாரமாவார்
எமது நபி தாஹா, தேர்ந்தெடுக்கப்பட்டவர்
صَلُّوا مَعَنَا
எங்களோடு இணைந்து ஸலவாத்துச் சொல்லுங்கள்