مَعَانِي قَدْ بَدَتْ عِنْدِي غَرِيبَهْ
விந்தையான பொருள்கள் என்னிடத்தே உதித்தன
Ta
مَعَانِي قَدْ بَدَتْ عِنْدِي غَرِيبَهْ
وَمَا تُفْضِي إِلِيْهْ بَعْدُ أَغْرَبْ
வியக்கத்தக்க அரிய ஞானங்கள் என்னுள் உதயமாயின
அவை இறுதியில் இட்டுச் செல்லும் இடமோ இன்னும் ஆச்சரியமானது
مِنَحْ مِنْ فَضْلِ مَوْلَانَا عَجِيبَهْ
وَمَاذَا فِي عَطَاهُ لَيْسَ أَعْجَبْ
எம் இறைவனின் அருட்கொடைகள் விந்தையானவை
அவனது கொடைகளில் வியக்கத்தக்கது அல்லாதது எது?
وَعِيدُ الْصَّبِ أَنْ يَلْقَى حَبِيبَهْ
وَسُبْحَانَ الَّذِي قَرَّبْ وَحَبَّبْ
காதலனின் பெருநாள் தன் காதலனைச் சந்திப்பதே
எங்களை அண்மிக்கச் செய்து நேசத்தை ஊட்டியவன் தூயவன்
مَعِي أَقْوَامْ فِي أَعْلَى كَتِيبَهْ
لَهُمْ أَسْرَارْ لَا تُحْصَى وَتُكْتَبْ
உயரிய தகுதியுள்ள மேன்மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்
எண்ணவோ எழுதிடவோ இயலாத ஆன்மீக ரகசியங்கள் அவர்களுக்கு உண்டு
مَوَاهِبْ عَالِيَةْ مَا هِيْ كَسِيبَهْ
وَإِحْسَانُ الْمُهَيْمِنْ لَيْسَ يُحْسَبْ
இவை உழைப்பால் ஈட்டியதல்ல, உயரிய வெகுமதிகள்
பாதுகாவலனின் பேரருளைக் கணக்கிடவே முடியாது
وَمَنْ لُهْ سَابِقَهْ يُدْرِكْ نَصِيبَهْ
مُوَفَّى دُونَ أَنْ يَشْقَى وَيَتْعَبْ
அருளின் முன்விதி யாருக்கு உண்டோ அவர் தம் பங்கை அடைவார்
சிரமமோ களைப்போ இன்றி அது முழுமையாக அவருக்குக் கிடைக்கும்
وَنَفْحَةُ بَاسِطِ الْنَّعْمَى قَرِيبَهْ
تَعَرَّضْ يَا فَتَى مِنْهَا تَقَرَّبْ
வாழ்வாதாரத்தை விரிவுபடுத்துவோனின் அருட்காற்று அருகிலுள்ளது
இளைஞனே, அதற்கு உன்னை வெளிப்படுத்தி நெருங்கிச் செல்
عَسَى الْمَكْلُومْ أَنْ يَلْقَى طَبِيبَهْ
فَيُضْحِي الْعِيْشْ لُهْ أَطْيَبْ وَأَطْيَبْ
காயப்பட்டவன் தன் மருத்துவனைக் காணக்கூடும்
அதன்மூலம் அவனது வாழ்வு என்றும் இனியதாகவும் தூய்மையாகவும் மாறும்
وَصَلَّى اللهُ مَا أَفْهَامٌ نَجِيبَهْ
وَعَتْ قَوْلاً بِمَاءِ الْعَيْنِ يُكْتَبْ
கண்ணீரால் எழுதப்பட வேண்டிய சொற்களை மேன்மையான அறிவுகள்
உணர்ந்திருக்கும் வரை இறைவன் தன் அருளைப் பொழிவானாக
عَلَى خَيْرِ الْوَرَى الْهَادِي حَبِيبِهْ
وَآلِهْ وَالَّذِي لِلْطُّهْرِ يَصْحَبْ
படைப்பினங்களில் சிறந்தவர், வழிகாட்டி, அவன் நேசர் மீதும்
அவரது குடும்பத்தினர் மற்றும் தூய வழியில் அவரைப் பின்பற்றுவோர் மீதும்