صَلَّى عَلَيْكَ اللَّهُ يَا عَدْنَانِ
அத்னானே! அல்லாஹ் உம்மீது அருள்புரிவானாக.
Ta
صَلَّى عَلَيْكَ اللَّهُ يَا عَدْنَانِ
يَا مُصْطَفَى يَا صَفْوَةَ الْرَّحْمَٰنِ
அத்னானின் வழித்தோன்றலே, இறைவன் உம்மீது ஸலவாத் பொழியட்டும்
முஸ்தஃபாவே, அளவற்ற அருளாளனின் அரும்பெரும் தெரிவே
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَعْطَانِي
هَذَا الْغُلَامَ الْطَّيِّبَ الْأَرْدَانِ
புகழனைத்தும் இறைவனுக்கே, அவனே எனக்குப் பரிசளித்தான்
நற்பண்புகள் கமழும் இந்தத் தூய பாலகனை
قَدْ سَادَ فِي الْمَهْدِ عَلَى الْغِلْمَانِ
أُعِيذُهُ بِالْبَيْتِ ذِي الْأَرْكَانِ
தொட்டிலிலேயே ஏனைய சிறுவர்களை விஞ்சித் தலைவரானார்
தூண்களைக் கொண்ட புனித இல்லத்தின் பெயரால் இவரைப் பாதுகாக்கக் கோருகிறேன்
حَتَّى أَرَاهُ بَالِغَ الْبُنْيَانِ
أَنْتَ الَّذِي سُمِّيتَ فِي الْقُرْآنِ
இவர் வளர்ச்சியடைந்து முழுமையுற்றதைக் காணும் வரை
திருக்குர்ஆனில் சிறப்பித்துப் பெயரிடப்பட்டவர் நீங்களே
أَحْمَدُ مَكْتُوبٌ عَلَى الْجِنَانِ
صَلَّى عَلَيْكَ اللَّهُ فِي الْأَحْيَانْ
சொர்க்கத்தின் சோலைகளில் அஹ்மத் என எழுதப்பட்டுள்ளது
எக்காலமும் இறைவன் உம்மீது ஸலவாத் பொழியட்டும்
أَحْمَدُهُ فِي الْسِّرِّ وَالْإِعَلْأَنِ
حَقًّا عَلَى الْإِسْلَامِ وَالْإِيمَانِ
அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் அவரைப் புகழ்கிறேன்
இஸ்லாத்திற்கும் ஈமானிற்கும் இதுவே உண்மையான கடமையாகும்
يَا رَبَّنَا بِالْمُصْطَفَى الْعَدْنَانِ
اغْفِرْ ذُنُوبِي ثُمَّ أَصْلِحْ شَأْنِي
எங்கள் இறைவா, தேர்ந்தெடுக்கப்பட்ட அத்னானின் பொருட்டால்
என் பாவங்களை மன்னித்து என் காரியங்களைச் சீராக்குவாயாக