لِغَيْرِ جَمَالِكُمْ نَظَرِي حَرَامُ
உமது அழகைத் தவிர மற்றொன்றைப் பார்ப்பது எனக்கு விலக்கப்பட்டதாகும்.
Ta
لِغَيْرِ جَمَالِكُمْ نَظَرِي حَرَامُ
وَغَيْرُ كَلَامُكُمْ عِنْدِي كِلَامُ
உந்தன் பேரெழிலையன்றி மற்றொன்றைக் காண்பது எனக்கு விலக்கப்பட்டதாகும்
உனது சொல்லன்றி வேறெதுவும் என் செவியில் சொல்லல்ல
وَعُمْرُ الْنَّسْرِ مِنْكُمْ بَعْضُ يَوْمٍ
وَسَاعَةُ غَيْرِكُمْ عَامٌ فَعَامُ
உன்னோடு கழியும் நெடுங்காலம் ஒரு நாளின் சிறு பொழுதே
பிறரோடு கழியும் ஒரு நாழிகை பலவாண்டு காலமாகும்
وَصَبْرِي عَنْكُمُ شَيْءٌ مُحَالٌ
وَمَا لِي قَاتِلٌ إِلَّا الْفِطَامُ
உன்னைப் பிரிந்திருக்கப் பொறுமை கொள்வது இயலாத ஒன்று
உன்னைப் பிரிவதைத் தவிர வேறெதுவும் என்னைக் கொல்லாது
إِذَا عَايَنْتُكُمْ زَالَتْ هُمُومِيْ
وَإِنْ غِبْتُمْ دَنَا مِنِّيْ الْحِمَامُ
உன்னைக் கண்ட மாத்திரத்தில் என் கவலைகள் யாவும் நீங்கும்
நீ மறைந்திருக்கும் வேளையில் மரணம் என்னை நெருங்கும்
أَوَدُّ بِأَنْ أَكُونَ لَكُمْ جَلِيسًا
وَتُنْصَبَ لِي بِرَبْعِكُمُ خِيَامُ
உன்னுடன் அமர்ந்திருக்கும் தோழனாக இருக்கவே நான் நாடுகிறேன்
உனது இருப்பிடத்தின் அருகே என் கூடாரத்தை அமைக்க வேண்டுகிறேன்
فَدَاوُوا بِالْوِصَالِ مَرِيضَ هَجْرٍ
يَهِيمُ بِكُمْ إِذَا سَجَعَ الْحَمَامُ
பிரிவென்னும் பிணியாளனை உந்தன் அணைப்பால் குணப்படுத்து
புறாக்கள் கூவும்போதெல்லாம் உந்தன் காதலில் அவன் பித்தாகிறான்
حَدِيثُ غَرَامِهِ فِيكُمْ قَدِيمٌ
وَمَلْبَسُهُ مِنَ الْحُبِّ الْسِّقَامُ
உன் மீதான அவனது காதல் கதை மிகத் தொன்மையானது
அந்தக் காதலால் அவன் அணிந்துள்ள ஆடையோ உடல் நலிவாகும்
فَأَنْتُمْ فِي الْأُصُولِ أَجَلُّ أَصْلٍ
إِذَا شِئْتُمْ تَحَصَّلَ لِي الْمَرَامُ
நீயே ஆதாரங்களுக்கெல்லாம் மேலான மேன்மை மிக்கவன்
நீ நாடினால் மட்டுமே என் விருப்பங்கள் ஈடேறும்
بِكُمْ صَعْبُ الْأُمُورِ يَعُودُ سَهْلًا
فَبِالْإِحْسَانِ جُودُوا يَا كِرَامُ
உன்னால் கடினமான காரியங்களும் எளிதாகிவிடும்
கண்ணியமிக்கவனே, உனது அருட்கொடையால் எனக்கு அருள்வாயாக
وَلَيْسَ سِوَاكُمُ لِلْجُودِ أَهْلًا
فَكَيْفَ نَزِيلُ سُوحِكُمُ يُضَامُ
கொடை வழங்குவதற்கு உன்னைத் தவிர தகுதியானவர் எவருமில்லை
உன் முற்றத்தில் தஞ்சம் புகுந்தவன் எவ்வாறு அநீதிக்குள்ளாவான்?